Blogger Course | Create Blogger Account
Online மூலமாக இலகுவாக சம்பாதிக்கக்கூடிய ஒரு வழியே Blogger ஆகும். இதில் எந்த ஒரு முன் அனுபவமும் Coding பற்றிய அறிவும் தேவை இல்லை. இந்த Blogger Course பதிப்பின் மூலம் எவ்வாறு Blogger கணக்கு ஒன்றை ஆரம்பிப்பது என்பது பற்றி பார்க்கலாம்.
Blogger என்றால் என்ன ?
Blogger என்பது இணையத்தினை மையமாக கொண்டு Blogging சேவையினை வழங்குகின்ற ஒரு தளமாகும். இதில் தனிநபர்கள் தங்களுடைய சொந்த வலைப்பக்கத்தினை இலவசமாக உருவாக்கி பராமரிக்கும் வசதியினை வழங்குகின்றது.
இதனை ஆரம்பத்தில் Pyra Labs உருவாக்கி இருந்தாலும் பின்னர் 2003ஆம் ஆண்டு Google நிறுவனம் இதனை பெற்றுக்கொண்டது. இதன் மூலம் Google இன் ஒருங்கிணைந்த சேவைக்குள் Blogger உள்வாங்கப்பட்டது.
Blogger கணக்கினை எவ்வாறு உருவாக்குவது ?
Blogger கணக்கினை உருவாக்க உங்களிடம் Google கணக்கு இருந்தால் போதும். அதாவது நீங்கள் Google இடம் இருந்து ஒரு Gmail கணக்கினை உருவாக்கி இருந்தால் போதும். அதனை கொண்டு Blogger கணக்கினை இலகுவாக உருவாக்கலாம். பொதுவாக இது Blogger இற்கு மாத்திரம் அன்றி Google யின் அனைத்து சேவைகளையும் ஒரே ஒரு Google கணக்கினை வைத்துக்கொண்டு இலகுவாக பயன்படுத்தலாம்.
Blogger கணக்கினை உருவாக்குவதற்கான படிமுறைகள்
- www.blogger.com என்ற இணையத்தளத்தினுள் பிரவேசிக்க வேண்டும். அதில் Create Your Blog எனும் Button ஐ Click செய்ய வேண்டும்.
- உங்களுடைய Gmail கணக்கின் முகவரி (Gmail Address) மற்றும் இரகசிய அடையாளத்தினை (Password) உள்ளிடுவதன் மூலம் Blogger கணக்கினுள் பிரவேசிக்க முடியும்.
- நீங்கள் முன்னரே தெரிவு செய்து வைத்துள்ள உங்களுடைய இணையத்தளத்தின் பெயரினை குறித்த Title என்ற இடத்தில் உள்ளிட வேண்டும்.
- உங்களுடைய இணையத்தளத்தின் முகவரியினை குறித்த Address என்ற இடத்தில் உள்ளிட வேண்டும்.
- வாழ்த்துக்கள் உங்களுடைய இணையத்தளத்தினை நீங்கள் உருவாக்கி விட்டீர்கள். உங்கள் இணையத்தளத்தினை பார்வையிட கீழே உள்ள View Blog என்பதை Click செய்வதன் மூலம் பார்வையிடலாம்.
நீங்கள் உருவாக்கிய இந்த இணையத்தளம் Google யின் சொந்த Domain Name ஆன blogspot.com யின் கீழ் இயங்கும். இந்த Domain சேவையானது Google இனால் இலவசமாகவே வழங்கப்படுகின்றது. இதனை கொண்டு நீங்கள் Life Time இலவசமாக பயன்படுத்தி உங்கள் இணையத்தளத்தினை இயக்கி கொண்டு செல்ல முடியும்.
முடிவுரை (Conclusion)
இந்த பதிப்பானது Blogger என்றால் என்ன ? அதனை எவ்வாறு உருவாக்குவது ? என்பது தொடர்பான பூரண விளக்கத்தினை வழங்கி இருக்கும் என நம்புகின்றேன். அடுத்த பதிப்பில் உருவாக்கப்பட்ட Blogger யில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றிய விளக்கத்தினைை பார்க்கலாம்.