Blogger Course | SEO Setting for Blogger Websites
கடந்த பதிப்பின் வாயிலாக நாம் எவ்வாறு ஒரு இணையத்தளத்தினை Bloggerயில் வடிவமைப்பது என்பது தொடர்பாக தெளிவான விளக்கத்தினை பார்த்தோம்.
இவ்வாறு வடிவமைக்கப்பட்ட இணையத்தளத்திற்கு நாம் சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. அது எவ்வாறு செய்வது ? என்ன என்ன மாறுதல்கள் செய்ய வேண்டும் ? என்ற பூரண விளக்கத்தினை இந்த பதிப்பின்வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
SEO Setting என்றால் என்ன ?
SEO என்பதன் முழுமையான அர்த்தம் "Search Engine Optimitation" என்பதாகும். அதாவது Google, Yahoo, Bingo, Yandex போன்ற பிரபல இணையத்தளங்கள் உங்களுடைய இணையத்தளத்தினை இனம் கண்டு தங்களுடைய தேடுதல் பொறியில் உள்ளடக்க வேண்டும் இதனை Indexing என்று குறிப்பிடுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் Search Engine களை பயன்படுத்தி ஒரு நபர் தேடும் சந்தர்ப்பத்தில் உங்களுடைய இணையத்தளம் அந்த நபருக்கு காண்பிற்கப்படும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய இணையத்தளத்திற்கு அதிகளவான நபர்கள் வருவார்கள். இதன் மூலம் உங்களுடைய வருமானம் அதிகரித்து இணையத்தளத்தின் ஆரோக்கியமும் மேம்படும். SEO என்பது ஒரு பெரிய படர்ந்த தொகுதி. அது பற்றி முழுமையான விடயங்களை தனி ஒரு பதிப்பின் வாயிலாக நாம் பார்க்கலாம்.
Blogger யில் செய்ய வேண்டிய SEO Settings ?
01. Basic Settings
இதில் 6 வகையான Settings காணப்படுகின்றது. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
- Title :
- Description :
- Blog language :
- Adult content :
- Google Analytics Measurement ID :
- Favicon :
இந்த பகுதியில் உங்களுடைய இணையத்தளத்திற்கான பெயரினை வழங்க வேண்டும். இதில் பதிவிடும் பெயர் அதிகம் தேடப்படும் Keyword கொண்டதாக மற்றும் 60 இற்கு குறைவான எழுத்துக்களுடன் இருப்பது சிறந்தது.
இதில் உங்களுடைய இணையத்தளம் பற்றிய சிறு குறிப்பினை குறிப்பிட வேண்டும். இது உங்களுடைய இணையத்தளம் எதனை மையப்படுத்தி இயங்குகின்றது என்பது பற்றியதாக இருக்க வேண்டும். இது 500 எழுத்துக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இதில் உங்களுடைய Blog எந்த மொழியினை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றதை குறிப்பிட வேண்டும். நீங்கள் பதிவிடும் Content ஆங்கிலத்தில் இருந்தால் English என்றும் தமிழில் ஆக்கங்களை பதிவிட்டால் Tamil என்றும் மற்ற வேண்டும்.
பதிவிடும் ஆக்கம் வயது வந்தவர்களுக்கா அல்லது அனைவரும் பார்க்ககூடியதா என குறிப்பிட வேண்டும். அயது வந்தவர்களுக்கான பதிப்புகள் மூலம் வருமானம் கிடைப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை. ஆக இந்த தெரிவினை OFF செய்தவாரு இருப்பது சிறந்தது.
நீங்கள் உங்களுடைய இணையத்தளத்தை கண்டிப்பாக Google Analytics உடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைப்பதன் மூலம் உங்களுக்கான இரகசிய இலக்கம் வழங்கப்படும். அந்த இலக்கத்தை இதனுள் உள்ளிட வேண்டும். எவ்வாறு இந்த இரகசிய இலக்கத்தினை பெறுவது பற்றி ஒரு தனி பதிப்பின் மூலம் பார்க்கலாம்.
இது இணையத்தளத்தினை பிரதிபலிக்கும் ஒரு Logo யின் சிறிய படைப்பாகும். இது Browser யில் இணையத்தளத்தின் பெயருடன் சிறிய அளவில் காணப்படும்.
02. Privacy Settings
Privacy Settings மிகவும் முக்கியமான ஒரு Setting ஆகும். இது எமது இணையத்தளத்தினை Search Engineகளில் காண்பிற்க வேண்டுமா ? வேண்டாதா ? என்பதனை தீர்மானிக்கும். உங்களுடைய இணையத்தால் இன்னும் முழுமையாக உருவாக்க வில்லை என்று சொன்னால் "Visible to search engines" என்ற தெரிவை OFF செய்து வைக்கலாம். உங்களுடைய இணையம் தயாராகிவிட்டது என்றால் இதனை கண்டிப்பாக ON செய்து வைக்க வேண்டும்.
03. Publishing Settings
- Blog address :
- Custom domain :
- Fallback subdomain :
- Redirect domain :
இதில் இணையத்தளத்தின் முகவரி காணப்படும். Blogger ஆரம்பிற்கும் போது கொடுத்த முகவரியே காணப்படும். இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மாற்றம் செய்யலாம். அனால் இது Blogger உடைய Blogspot.com என்ற Sub Domain உடனே காணப்படும்.
நீங்கள் புதியதாக Domain வாங்கினால் இதில் இணைத்து பயன்படுத்த முடியும்.
இதில் எந்த மாற்றங்களும் செய்ய வேண்டிய தேவை இல்லை.
Custom domain பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் இதனை Enable செய்து வைப்பது அவசியம் ஆகும். இவ்வாறு செய்வதனால் இணைய முகவரிக்கு முன்னாள் www என்பதனை பயன்படுத்தாமல் நேரடியாக முகவரியினை உள்ளிடுவதன் மூலம் தானாகவே www என்ற சொற்களை எடுத்துக்கொள்ளும்.
04. HTTPS Settings
HTTP என்பது Hayper Text Transfer Protocole ஆகும். HTTP என்பது ஒரு பாதுகாப்பற்ற இணையமாகும். HTTPS என்பது பாதுகாப்பான இணையம் ஆகும். எனவே HTTPS என்பதனை Enable செய்து வைப்பது அவசியம் ஆகும்.
05. Permissions Settings
- Blog admins and authors :
- Pending author invites :
- Invite more authors :
- Reader access :
இந்த இணையத்தை யார் யார் பயன்படுத்த வேண்டும் என்ற தெரிவினை இதில் பயன்படுத்த வேண்டும். இதில் Admin/Author இணை தெரிவு செய்ய முடியும்.
Admin/Author ஆக தெரிவு செய்ய நீங்கள் அனுப்பிய Invite ஐ இன்னும் ஏற்றுகொள்ளதவர்கள் இந்த பகுதியில் Pending ஆக இருப்பார்கள். அவர்கள் Invite ஐ ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கும் வரையிலோ இந்த பகுதியில் காணப்படுவார்கள்.
இதில் உங்களுக்கு தேவையான நபர்களினை Admin/Author ஆக Invite பண்ண முடியும். குறித்த நபர்களின் E-mail முகவரியினை உள்ளிடுவதன் மூலம் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் Invite அனுப்பப்படும்.
உங்களுடைய இணையத்தளத்தினை யார் யார் பார்க்க வேண்டும் என்பதனை இதில் தெரிவு செய்ய முடியும். இதில் "Public" என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.
06. Post settings
- Max posts shown on main page :
- Image lightbox
- Lazy load images
- WebP image serving
உங்களுடைய Home Page யில் எத்தனை பதிவுகள் இருக்க வேண்டும் என்பதனை தெரிவுசெய்ய வேண்டும்.
2-4 வரையான Settings அனைத்தும் Enable செய்து இருக்க வேண்டும். இது இணையத்தில் Imageகள் Load ஆவும் நேரத்தை தாமத்திக்கும். இது இணைய வேகத்தை அதிகரித்து இணையத்தின் ஆரோக்கியத்தை பேணும்.
07. Comments settings
- Comment location :
- Who can comment? :
- Comment moderation :
Comment செய்யும் பக்கம் எவ்வாறு தோன்ற வேண்டும் என்பதனை இங்கு தெரிவு செய்ய வேண்டும்.
யார் யார் உங்களுடைய பதிவுகளுக்கு Comment செய்ய முடியும் என்பதனை தெரிவு செய்யலாம். இதில் Google Account வைத்து இருப்பவர்கள் Comment செய்வது நன்று.
இதில் Never என்பதனை தெரிவு செய்து இருக்க வேண்டும்.
08. Email settings
இந்த பகுதியில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை இல்லை. இது தனித்துவமான மின்னஞ்சல் முறையினை பயன்படுத்துபவர்கள் மாற்றங்களை செய்ய முடியும்.
09. Formatting Setting
இதில் குறித்த இணையத்தளம் இயங்கும் நாட்டின் நேரத்தினை, தினத்தினை இங்கு மாற்றம் செய்ய முடியும்.
10. Meta tags Setting
இது முகவும் முக்கியான ஒரு Setting ஆகும். இதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். இதில் நீங்கள் குறிப்பிடும் வசனங்களே Search Engine களில் தோன்றும்.
- Enable search description
- Search description :
இந்த Setting ஐ கண்டிப்பாக ON செய்து வைப்பது மிக முக்கியமாகும்.
இதில் இணையம் தொடர்பான முக்கியமான விடயங்களை Keyword உடன் குறிப்பிட வேண்டும். இதில் கூடியது 150 எழுத்துக்களை கொண்டதாக அமைய வேண்டும்.
11. Errors and redirects
இதில் இணைய முகவரியில் ஏற்படும் தவறுகளால் உங்கள் இணையத்தினை அடைய முடியாதவர்களுக்கு 404 Error என்பதினை காண்பிற்கும். மேலும் அவ்வாறு தவறு நிகழும் இணையதின் முகவரிக்கு பதிலாக வேறு இணைய பதிப்பின் முகவரியினை மாற்றிக்கொடுக்கும் வசதி இதில் காணப்படுகின்றது.
12. Crawlers and indexing
இது Search Engine உங்கள் இணையத்தளத்தின் எந்த பகுதிகளை இனங்கான வேண்டும் எந்த எந்த பகுதிகளை காண்பிற்க கூடாது என்பதனை தெரிவு செய்ய இந்த பகுதி காணப்படுகின்றது.
- Enable custom robots.txt
- Custom robots.txt
- Enable custom robots header tags
- Home page tags
- Archive and search page tags
- Post and page tags
- Google Search Console :
இதனை Enable செய்ய வேண்டும்.
User-agent: *
Disallow: /search
Sitemap: https://www.yourwebsite.com/sitemap.xml
Sitemap: https://www.yourwebsite.com/sitemap-pages.xml
இதனை Enable செய்ய வேண்டும்.
இதில் "all, noodp" இரண்டையும் Enable செய்ய வேண்டும். மற்றைய அனைத்தும் Disable செய்து இருக்க வேண்டும்.
இதில் "noindex, noodp" இரண்டையும் Enable செய்ய வேண்டும். மற்றைய அனைத்தும் Disable செய்து இருக்க வேண்டும்.
இதில் "all, noodp" இரண்டையும் Enable செய்ய வேண்டும். மற்றைய அனைத்தும் Disable செய்து இருக்க வேண்டும்.
இதில் கண்டிப்பாக இணையத்தளத்தினை இணைக்க வேண்டும். இதன் மூலமே Google உங்களுடைய இணையத்தளத்தின் சகல பதிவுகளையும் Search Engine இற்கு காண்பிக்கும். இணையத்தளத்தில் உள்ள குறைபாடுகளை குறிப்பிடும். இதில் இணையத்தை இணைக்கும் செயல் முறைகளை பற்றி விரிவாக அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
13. Monetisation
இந்த பகுதியானது உங்களுடைய இணையத்தளத்திற்கு Google Adsense அனுமதி வழங்கிய பின்னர் அவர்களது விளம்பரங்களை உங்களுடைய இணையத்தளம் காண்பிற்கும். அதற்கான வருமானம் உங்களுக்கு கிடைக்கும். அதற்கு அனுமதி அளிக்கும் வகையில் Google Adsense யினால் வழங்கப்படும் Code இணை இதில் சேர்க்க வேண்டும்.
14. Manage blog Settings
இந்த பகுதியில் உங்கள் இணையத்தளத்தின் பதிப்புக்களை தரவிறக்கவும், Backup செய்து பாதுகாக்கவும் அல்லது இணையத்தளத்தினை அழிக்கவும் முடியும்.
15. Site feed Settings
இந்த பகுதியில் புதிய Blogging செய்பவர்கள் எந்த மாற்றங்களையும் செய்ய வேண்டிய தேவை இல்லை. இதனை தேவைப்படும் போது மாற்றிக்கொள்ள முடியும்.
16. General Settings
இதில் உங்களுடைய Blogger Profile இணை Edit செய்து கொள்ள முடியும். இதற்கு உங்களுடைய Admin பற்றிய முழுமையான விடயங்களை உள்ளிட வேண்டும்.
முடிவுரை (Conclusion)
இந்த பதிப்பின் மூலம் நீங்கள் ஆரம்பித்த Blogger யில் என்ன என்ன மாற்றங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற முழுமையான விளக்கத்தினை பெற்று இருப்பீர்கள் என நம்புகின்றோம். Blogger யில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அது உங்களுக்கு தீர்த்துவைக்கப்படும். அதற்கு எங்களுடைய Support Center மூலம் தொடர்பு கொள்வதன் மூலம் தீர்த்து வைக்கப்படும்.